ஞாயிறு, 8 ஜனவரி, 2017

வாருங்களேன் கபாலி!

வாருங்களேன் கபாலி!
==================================ருத்ரா இ பரமசிவன்

நீங்கள் ஒரு தடவை சொன்னா
அது நூறு தடவைக்கு சமம்
என்று
நீங்கள் உதிர்த்த முத்துக்கள்
இன்னும் எங்களுக்குள்
கடல் அலைகள்.
நாங்கள் உங்களை நூறு தடவை
கேட்டுவிட்டோம்..
நீங்கள் ஒரு தடவையாவது
சொல்லுங்களேன்
அந்த நாற்காலியில் அமர்வேன் என்று.
நீங்கள் தமிழன் இல்லை
என்ற
அலர்ஜி விளையாட்டு எல்லாம்
எப்போதோ
எல்லைகள் உடைந்து போயின.
காவிரி என்றால்
கரிகால் சோழன் என்றால்
நம் எல்லோருக்கும்
வரலாறுகளின் ஊற்று தானே!
உண்மையில்
திராவிடத்தின் உயிரிழை
இந்த தக்காண மண்ணின்
நரம்புகளில் எல்லாம்
விரவித்தான் கிடக்கிறது.
அதன் தமிழ் மின்னல்
இங்கு இந்தியா முழுவதும்
அடி வயிற்றில்
வேர் ஊடித்தான் இருக்கிறது.
பேய்ப்படம் சினிமாக்கள் பார்க்கலாம்.
வாக்குப்பெட்டிக்குள்ளுமா?
நீங்கள் தான்
தீக்குச்சி இல்லாமல்
பற்ற வைப்பீர்களே!
இந்த‌
அரசியல் இருட்டின் வயிற்றைக்கிழித்து
ஒரு குச்சியை உரசுங்களேன்.
இது கபாலி 3 ஆக‌
(திரைப்படம் அல்ல)
இருந்து விட்டுப்போகட்டுமே!
==========================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக