வியாழன், 5 ஜனவரி, 2017

ஆட்டுக்குட்டிகள்

ஆட்டுக்குட்டிகள்
==============================================ருத்ரா இ.பரமசிவன்.

என்ன இல்லை திருநாட்டில்?
எல்லாம் இருந்தது.
தனியே வரும் பெண்ணை
கசக்கும் ஆண் மிருகங்கள் இருக்கின்றன.
அதை துல் லியமாய் படமெடுக்கும்
கண்காணிப்புக் கேமிராக்கள் இருந்தன.
காவலுக்கு வைக்கப்பட்டவை
தரும் காட்சிகள்
ஊடகங்களில் திரும்ப திரும்ப வந்து
போர்னோ "பாப் காரன்கள்" ஆகின,
வக்கிரங்கள் கொறிக்க கொடுத்து
ஹிட் லிஸ்ட் எகிறுகிறது.
முகநூல்களும்  நஞ்சு பீய்ச்சும்
விந்து பெட்டகங்கள் ஆகி
"சேவ்" செய்தன.
என்ன இல்லை திருநாட்டில்.?
கார்ப்பரேட் ராஜ நாகங்கள்
இந்த ஆட்டுக்குட்டிகளை கொத்துவதே
நம் உயர் ரக பொருளாதாரம்.

===========================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக