சனி, 7 ஜனவரி, 2017

விக்

பைரவாவில் விஜய்க்கு விக்
=========================================ருத்ரா

நம்மை மொட்டையடிப்பது தெரியாமல்
மொட்டை யடிக்கும்
இந்த ஜிகினா உலகம்
விஜய் விக் பற்றி
ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கட்டுரைபோல்
அலசி அலசி ஊற்றுகிறது.
ஏற்கனவே
"சவரக்கத்தி" என்று
தலைப்பில் பயமுறுத்தியிருக்கிறார்
மிஷ்கின்.
கத்தி துப்பாக்கி வரிசையில்
விக் என்று
ஒரு வரிக்கதை அல்ல‌
ஒரு சொல் கதையே
நட்சத்திர ஓட்டல்களில்
காகிதம் பேனாக்களோடு
கரு தரிக்கலாம்.
"ஒன் இந்தியா தமிழில்" தான்
மிக இலக்கியத் தரம் வாய்ந்த
இந்த கட்டுரை வெளியாயிருக்கிறது.
நடிப்பில்
ஓவ்வொரு ரோமக்கீற்றும்
பஞ்ச் டைலாக்கில்
இங்கே தூள் கிளப்பி
கட் அவுட்டாய்
அண்ணா சாலையே
அண்ணாந்து ஆ வென்று
வாய் பிளக்குமாறு
"மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்"
என்று குதியாட்டம் போடுவது தானே
நம் தமிளன் கலாச்ச்சாரம்
கலாச்சாரங்கள் வாழ்க!

======================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக