ஞாயிறு, 8 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு குறும்பாக்கள்

ஜல்லிக்கட்டு குறும்பாக்கள்
===========================================ருத்ரா இ பரமசிவன்

காளை கண்ணுக்கு தெரியவில்லை.
பீட்டாவும் பொன்ராதாகிருஷ்ணனுமே..இங்கு
பருத்திக்கொட்டை புண்ணாக்கு.

அலங்காநல்லூர் இப்போது
காளைகளோடு காளைகள்(வீரர்கள்)
விளையாடும் ஒலிம்பிக் திடல்.

ஜல்லிக்கட்டை அழிப்பது
நம் "கலித்தொகை" ஏடுகளை
எரிப்பதற்கு சமம்.

பங்கு மூல தன‌ வியாபாரத்தின்
சின்னத்தில் "காளை" இருக்கிறது.
அப்புறம் ஏன் முதலைக்கண்ணீர்?

காளை இறைச்சியை
டப்பியில் அடைத்து டாலர்கள் குவிக்கவே
"மிருக வதைக்கு கண்ணீர்" எனும் நாடகம்.

================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக