புதன், 25 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு....ஒரு சொல் ஆராய்ச்சி



ஜல்லிகட்டு....ஒரு சொல் ஆராய்ச்சி
===============================================ருத்ரா இ பரமசிவன்



ஜல்லிகட்டு என்பது சல்லிக்கட்டு என்பதன் மரூஉ தான்.ஜ வும் ச வும்
தமிழுக்கும்  வடதமிழுக்கும்(சமஸ்கிருதம்)இடையே உள்ள "மாறுகொள்"
வழக்கு (கம்யூட்டேடிவ்)தான்.நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் . சல்லி என்றால் காசு என்று பொருள்.அந்த காசுகளை காளைகளின் கொம்புகளில்  ஒரு துணி முடிப்பில் கட்டி விரட்டி விடுவார்கள்.வீரமான இளைஞர்கள் காளைகளின் திமிலைபற்றி "தழுவி" அடக்கி அந்த காசுகளை பரிசுப் பொருளாக எடுப்பார்கள்.சல்லிக்கட்டு தான் ஜல்லிக்கட்டு ஆக மாறியிருக்கிறது.

"ஜலம்"என்ற சொல் வடதமிழ் சொல் என்று. அருவியின் ஓடை "சல சல"என்று ஓடுகிறது என்பதில் உள்ள சல என்பது தான் ஜல என்று மாறியிருக்கிறது. இன்னும் நம் வழக்கில் புண் சீழ் வைத்து நீர் கோத்தால்  "சலம்" வைத்திருக்கிறது என்கிறோம்.ஓடு நகரு செல் என்ற பொருளில் சலித்தல் என்ற சொல் தூய தமிழ்ச்சொல் ஆகும்.கடல் அலைக்கும் சலித்தல் என்ற பொருள் உண்டு.அந்த அசைவு நீர் மேலும் கீழும் அசைதல் ஆகும். வீடுகளில் முறத்தில் அரிசியும் உமியும் மேலும் கீழும்  அசைக்கப்படுதலே சலித்தல் எனப்படுகிறது.

வ‌டமொழியில் "அ"என்ற எதிர்மறைச்சொல் "சல"த்தோடு சேர்த்து அசலம் ஆகி அது அசையாத மலையைக்குறிக்கிறது.அந்த "அ" என்ற எதிர்மறை வழக்கு கூட "அல்" அற்று என்ற தமிழ்ச்சொல்லின் குறுகல் தான்.எனவே "வேர்ச்சொல்" வழியேநுழையும் நுட்பமான "வழக்கியல்" தமிழ் மூலம் சமஸ்கிருதம் என்பது நம் வடதமிழே.சிந்துவெளித்தமிழன் உலகின் பல ஒலிக்குறிப்புகளை இங்கு கொண்டு வந்த தமிழின் உயிர்மெய் எழுத்துக்களான க ச ட த ப வுக்கு நான்கு வித ஒலிப்புக‌ளையும் (மிகு மெல்லினமும் மிகு வல்லினமும் கலந்த)ஒலிப்புகளையும் வேறு சில மாற்று ஒலிப்புகளையும் சேர்த்து சமஸ்கிருதம் கண்டுபிடித்தான்.சமம் என்பது தூயதமிழ்ச்சொல்(சான்று...."சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்..."எனும் குறள் வரிகள்.)கிருதம் "கரம் என்ற தமிழ்ச்சொல்லின் மரூஉச்சொல் தான்.தமிழ் மொழிக்கு இணையாக (சம) ஒரு "செய்யப்பட்டது"(கிருதம்) என்ற பொருளில் தான் சமஸ்கிருதம் உருவானதுஅந்த "ஸ்"என்பது இருசொல்லை (சமம்+கரத்தம்) சேர்ப்பதற்கான அசை ஆகும்.இது தமிழுக்கு ஒரு மறு மொழி ஆகும்.அது தமிழ் மக்களுக்கு  புரியாத ஒலிப்புகளை நிறைய உள்ளடக்கியிருந்ததால் "மறை மொழி" ஆகும். தமிழர்களிடையே இது பெரும்பாலும் "மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட மொழியாக இருந்ததால் "மறை" மொழி என்றே பண்டை வழக்கில் அழைக்கப்பட்டது. தமிழ் நிறை மொழியாகவும் அந்த வட தமிழ் மறை மொழியாகவும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இன்றளவும் (தண்ணீரும் எண்ணெயும் போல ) ஒட்டாமல் தமிழ்  நாட்டில் மட்டுமே இருக்கிறது.மற்ற மாநிலங்களில் மொழிக்கலப்பு நடை பெற்றது போல் தமிழ் நாட்டில் நடை பெற வில்லை.இன்றும் தமிழ் மற்ற கலப்பு மொழிகளைப்போல் "க ச ட த ப "
வில் 4 வகை ஒலிப்புக்களை கலக்காமல் தனியாகவே வழங்கிவருகிறது. இன்று வரை இந்திய மொழிகளின் மூல மொழியாயும் தொன்மை சிறந்த மொழியாயும் "உயர் தனிச்செமொழியாயும்" நம் தமிழ்மொழி விளங்கி வருகிறது.

இந்த கோணத்தில் பார்த்தால் இந்தியாவின் மூல மொழியாகவும் முதல் மொழியாகவும்  இருப்பது இருக்க வேண்டியது "தமிழே" ஆகும்.ஆனால் அந்த நமது வடதமிழ் முதல் தமிழின் மீது பகைமை கொண்டு அடியோடு இந்த முதல் தமிழையே அழித்து ஒழிக்க நடந்த வரலாற்று வடிவங்களில்  காரணமாக இருந்தது  ஆட்சி அரசியலும் மற்றும் உட்பகையுமே ஆகும்.

====================================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக