ஞாயிறு, 15 ஜனவரி, 2017

சோ

சோ
===================================ருத்ரா இ பரமசிவன்.

சிறந்த நகைச்சுவைக் கலைஞர்.
கலாய்ப்பு
எனும் புதிய உத்தியை காட்டியவர்.
இவர் நாடகங்கள்
பெர்னாட்ஷாவின் நிழலில் படைக்கப்பட்டவை.
ஆழ்ந்த சிந்தனைகளுக்கு பஞ்சமில்லை.
இவரைப் பார்த்தால்
"வா வாத்யாரே ஊட்டாண்டே"
எனும்
மனோரமா ஆச்சியின் பாடல் தான்
முன் வந்து நிற்கும்.
இவரது காமெடிகள்
வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை.
ஆனாலும்
இவருக்கு ஒரு அலர்ஜி நோய்
தொற்றிக்கொண்டு கடைசிவரை
குணமாகவே இல்லை.
தமிழ்
தமிழ் இனம்
தமிழ்ப்பெருமை
தமிழ்த்தொன்மை
இவை மீது கட்டுக்கடங்காத எரிச்சல்.
அப்போது இருந்த
தமிழ் ஆட்சியாளர்களைப்பற்றிய‌
இவரது சொல் அம்புகள்
காமெடிகளாய் வெளிவரும்.
அவற்றிற்கும்
தமிழர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
ஆம்
தமிழர்கள் விழுந்தது
தமிழை இழந்தது
எதுவுமே தெரியாமல்
தமிழர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
அவர் காமெடிக்கு அவர்கள் மகுடம் சூட்டினார்கள்.
அவரோ
தமிழ்ப்பண்பு மாண்பு
இவற்றைக்கொச்சைபடுத்தினார்.
எல்லோரும் தமிழர்கள்.
பிராமணர்களும் தமிழர்கள்.
இப்படியே சொல்லிக்கொண்டுபோய்
தமிழர்களும் பிராமணர்களே
என்று சொல்லிவிடுவார்களோ என்று
ஒரு பயம் வந்து விட்டது.
"சூத்ராள்  பிராமணாளா?
அபச்சாரம்னா!"

வேதங்கள் கடவுளை கண்டதில்லை.
வேதங்கள் கடவுளைத் தேடி தேடி தான்
சுலோகங்களை குவித்திருக்கின்றன.
உண்மையான பிராமணனும்
அதன் அடியில் நசுங்கி விடாமல்
கடவுளைத்தேடி
ஒரு ஞானப்பயணம் செய்யவேண்டும்.
அதனால் "எங்கே பிராமணன்" என்று
அவரும் ஒரு தேடல் வேள்வியில்
ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதுவே அவர் வாழ்நாள் சாதனை.
மிகவும் பாராட்டப்படவேண்டிய படைப்பு அது!
இருப்பினும் திராவிட இஸம் என்பது
அவருக்கு மிகவும் எரிச்சல் தந்த
"திராவக இஸமே
தமிழர்களின் ஆட்சி மீது
ஒரு காட்டமாகவே காமெடி செய்தார்.
பிராமணர்கள் பிராமணர்கள் தான்
என்று
ஒரு கோடு போட்டு வேலிகட்டினார்.
அவ்வப்போது நிகழும் சாணக்கிய தந்திரங்களில்
அவரும் வெளிப்பட்டு நின்றார்.
தமிழர்கள் முட்டாள்கள் என்று
விளம்பரப்படுத்தவே
அவரது "துக்ளக்" உதித்தது.
இன்று ரஜனி இவரைப்போற்றி வாழ்த்துகிறார்.
மோடி வாழ்த்துகிறார்
இவர் பிரிவினைவாதிகளுக்கு எதிரி என்று.
தமிழ் தமிழ் தான்.
அது சமஸ்கிருதம் இல்லை.
வீட்டின் உக்கிராண அறைக்குள்
சமஸ்கிருதத்தை வைத்துக்கொண்டு
தமிழன் என்று சொல்பவர்களே
இவரை
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறார்கள்.
நாமும் இவரை அன்போடு வாழ்த்துவோமாக!
தமிழுக்கும் சீற்றம் வரும்
என்பதற்கு ஒரு காரணமாய்
இருந்ததனால்
நாமும் அன்போடு இவரை வாழ்த்துவோமாக!
அமரர் ஆனவர் மீது அவதூறுகள் வீசுவது
நாகரிகம் அல்ல!
அறுபது எழுபதுகளில்
இளைஞர்களிடையே ஒரு
புதிய சிந்தனைப்பரிமாணத்தை
நிறுவி வைத்தார்.
அதற்காகவும்
அவரை அன்போடு நாம் போற்றுவோமாக!

===================================================

2 கருத்துகள்: