திங்கள், 2 ஜனவரி, 2017

பைரவா_2

பைரவா_2
============================ருத்ரா

ரவா...ரவா
இது ஸ்பெஷல் ரவா.
விஜய்
கபாலியையே
மணல் குவித்து
இமயச்சிற்பம் செதுக்கியிருக்கிறார்.
அந்த மொட்டை ராஜேந்திரனும்
மிடுக்கு வெள்ளையில்
முகம் காட்டுகிறார்.
தூரிகை மரங்கள் போல்
பனங்காடுகளில்
விறு விறு ஓவியங்கள்.
காதல் கிளு கிளுப்புக்கு
வசனத்தில்
பஞ்சுமிட்டாய் சவ்வுமிட்டாய் எல்லாம்
சவைத்து
இனிமை துப்புகிறார் விஜய்.
அந்த‌
"சுண்டு......விரலுக்குள்"
ஏகப்பட்ட எந்திரன் துப்பாக்கிகள்
கர்ப்பம்
சர்ப்பமாய் சீறி
பிரசவிக்கும் போல் இருக்கிறது.
ட்ரெய்லர் என்றால்
இழுத்துக்கொண்டே ஓடுவது ஆகும்.
அந்த புகைக்குள்
புழுதிப்புயல் நெருப்புக்குள்
இழுத்துக்கொண்டு ஓடுகிறது.
"பைரவா"
==========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக