ஞாயிறு, 29 ஜனவரி, 2017

"அதேகண்கள்"

"அதேகண்கள்"
===================================ருத்ரா

அறுபதுகளில்
இயக்குநர் திருலோகசந்தர்
இதே தலைப்பில்
எடுத்திருந்த படம்
கண் முன் நிழல் ஆடுகிறது.
"பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தப் பாத்து பயந்தாளாம்.."
அப்புறம்
"சொட்டிஜா சொட்டிஜா சொட்டிஜா
சொன்னவா சொன்னவா சொன்னவா..."
இந்த இனிய சௌராஷ்ட்ர ஒலிப்பும்
தமிழ்ச் சுவையும் சேர்த்து
பதித்த அந்த பாடல்
இன்னும்
அந்த "ஆர்யபவான்"ஸ்வீட்ஸாய் இனிக்கிறது.
தமிழனுக்கு
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்"
அதே "அதே கண்கள் தான்" தான்
இப்போதும்
சாதி லேபிள்கள் உரித்துப்போட்ட போதும்
"ஐயரும்" "நாயரும்"
கலக்கு கலக்கு என்று
கலக்கியிருக்கிறார்கள்.
அன்றைய காதல் இளவரசன் ரவிச்சந்திரன்
அதே கண்களில் கண்டது
திகில் திகில் திகில் மட்டுமே.
கடைசி வரை முடிச்சு அவிழ்க்கப்படாமால்
விரட்டிக்கொண்டே இருந்தது.
இதில் கலையரசன்
அதே கண்ககளில் கண்ட கன்னி மாறியதே
பெருந்திகில்.
"செல்" யுகம்
சினிமாவை புரட்டிப்போட்டு விட்டது
என்பது போல்
அந்த "கைப்பொறியில்"தன் கண்பொறியை
டவுன் லோடு செய்வது போல்
தன் அருமையான நடிப்பை
அவர் வெளிப்படுத்திய விதம்
ஒன்றே சாட்சி.
"பிளேடு முனையில்"
வெற்றிப்பயணம் செய்திருக்கிறார்கள்.
கொஞ்சம் பிசகியிருந்தால்
ரண களம் தான்.
பெரிய பட்ஜெட் படங்களை
அநாயசமாக எட்டிப்பிடித்து
சினிமாவில் "ட்ரபீஸ்" விளையாடி
சர்க்கஸ் காட்டியிருக்கிறார்கள்.
புதிய இயக்குநராம்!
யார் சொன்னது
பல பழங்கள் தின்று கொட்டை போட்டவர் போல்
கோட்டையைப் பிடித்திருக்கிறார்.
===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக