செவ்வாய், 10 ஜனவரி, 2017

அன்பு நண்பர்களே!

அன்பு நண்பர்களே!

சன்னல் திறந்து பார்த்தேன்.
காலை வணக்கம்.
கோப்பையில் காப்பி
ஆறிக்கொண்டிருக்கலாம்.
அதற்குள்
இந்த வானத்து டிகாஷனில்
ஒரு நீல வண்ணம் பருகலாம்.
நுரைக்கு முன்னே
நரைத்துப்போகும் வாழ்க்கையில்
கடல்களையும் சிபபிகளையும்

பையில் அள்ளிப்போட்டுக்கொள்ளலாம்.
நம்பிக்கை இருக்கிறது.
ஏழு அல்ல‌
ஏழு மில்லியன் ஜன்மங்கள்
எனக்கு உண்டு.
பிண்டம் பிடித்து எள்ளும் தண்ணீரும் இறைத்து
சம்ஸ்கிருத எச்சிலால் இரைச்சல் இட்டு
ஜன்மாக்களை ஜபமாலை உருட்டுவதல்ல அது.

கவிதை மை ஊற்றில்
ஆயிரம் ஆயிரம் உயிர்களை
உடுத்திக்கொள்ளலாம்!
உங்கள் தோட்டத்தில் பாருங்கள்
ஒரு வளையல் பூச்சி ஒன்று
அந்த செம்"பருத்தி"ப்பூவில்
தன் கனவை ஆடையாக்கிக்கொள்ள‌
விரைந்து ஊர்ந்து கொண்டிருக்கிறது.
அது
ஏன் நானாக இருக்கக்கூடாது.?

======================================ருத்ரா இ.பரமசிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக