ஞாயிறு, 29 ஜனவரி, 2017

பொமரேனியன்.

பொமரேனியன்.
=======================================ருத்ரா
பொமரேனியன் நாய்க்குட்டியாய்
கழுத்துச்சங்கிலியுடன்..
அது என்னை இழுத்துக்கொண்டு ஓடுகிறதா?
நான் அதை செலுத்துகிறேனா?
ஒரு வழியாய்
இந்த சேவல் முட்டையிட்டு விட்டது.
இரண்டாயிரத்து பதிமூணுக்குள்
பதினாலாய் ஒரு முட்டை.
முட்டையின் இன்வெர்ஸ் கோழி.
கோழியின் இன்வெர்ஸ் முட்டை.
கணிதத்தை ஆய்லரும் ரெய்மானும்
டேவிட் ஹில்பர்ட்டும் எட்வர்டு விட்டனும்
கைமா போட்டுவிட்டார்கள்.
அதன் மீது நம்மூர் ராமானுஜம் போட்ட‌
முட்டை தோசையோ
அந்த "நாமக்கல்"பரோட்டோ கடைக்காரனுக்கு கூட‌
மிகவும் பரிச்சயம்.
ஒன்றை சீரோவால் வகுத்தால் இனிஃபினிடி.
ஒன்றை இன்ஃபினிடியால் வகுத்தால் சீரோ.
இப்போது ஏன் இந்த முட்டையை
ஜபமாலை போல் உருட்டி உருட்டி
2013..2014..என்று
ஜபித்துக்கொன்டிருக்கவேண்டும். 

காலம் நழுவுகிறது 
காலடியில் 
தலை மீது.. 
காலத்தை கையில் 
கட்டியதாய் 
கர்வப்பட்டு கொண்டோம் 
கைக்கடிகாரம் கொண்டு. 
அதை 
மின்னணுத்துடிப்புகளாக்கி 
தலையணை ஓரத்து 
நண்பனாக்கி 
நாம் தூங்குவதை 
கவனிக்க வைத்துக்கொண்டோம். 
காலத்தை 
முண்டைக்கண் உருவில் 
எண்களாக்கி அச்சிட்டு 
சுவரில் நிறுத்தினோம். 
கோழி ரெக்கையை உரிக்கும் விதமாய் 
தினம் தினம் 
நாள் கிழித்தோம். 
கணக்குப்பார்த்தால் 
கீழே நாம் 
சருகுகள். 
அது உயர்த்தில் எங்கோ? 
போக்கு அற்ற நமக்கு 
பொழுது போக்க‌ 
காலம் தேவை. 
கணங்கள் பறந்து போய் விட்டபிறகு 
அதைப்பிடிக்க 
இன்னும் புதிய கணங்கள் 
நமக்குத் தேவை. 
அப்போது 
கடிகாரம் கூட‌ 
"கடி"க்கும் குதறும். 
பழசு புதிதாகிறது. 
புதிது பழசாகிறது. 
நம்மால் 
களைத்துப்போகாமல் 
எண்ணிக்கொண்டிருக்கும் வரை 
எண்ணிக்கொண்டிருப்போம். 
இந்த கடற்கரையில் 
கால்கள் அளைய வரும் 
இந்த அலை 
எத்தனையாவது அலை? 
தெரியவில்லை. 
இனியாவது அதில் ஒரு 
ஆணி அடித்து வைப்போம். 
சிலுவைகள் அறைய அல்ல‌ 
நம் கனவுகளை 
காலண்டர் அட்டைகளாக்கி 
அதில் மாட்டி வைக்க. 

======================================ருத்ரா இ பரமசிவன்
ஜனவரி 8  2014 ல் எழுதியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக