புதன், 4 ஜனவரி, 2017

வெயில்

வெயில்
====================================ருத்ரா
வெயில் பிழம்பு கல்லை கழுவியது.
மண்ணை துழவியது.
நீருக்குள்
புற ஊதாக்கதிர்களை
புளிச்சென்று துப்பியது.
ஒரு மீன்கொத்தியின்
நீல சிவப்புச்சிறகுகளில் கண்ணடித்தது.
அதன் அலகில் குத்தியிருந்த‌
கெண்டையை தன் மினுக்கும் வெளிச்சத்தால்
வருடியது.
ஆற்று மணலில்
பாய்விரித்து புரண்டு கிடந்தது.
வெயில் தன் வெம்மையால்
இந்த பூமியை முத்தமிட எத்தனித்தபோது
இந்த உயிர்கள்
கசங்கின.
புழுங்கின.
இறுதியில்
அதற்கும் மேற்கு திசையில் சிதை.
ஏழு வர்ணங்களில்
மிஞ்சிய சிவப்பு மட்டும்
அதற்கு கொள்ளி வைத்தது.

=====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக