ஞாயிறு, 1 ஜனவரி, 2017

நாள் காட்டி


நாள் காட்டி
__________________________________________

அது நாள் காட்டி மட்டும் அல்ல!
நாக்கு துறுத்தி பயமுறுத்தும்
வாள் காட்டியும் கூட.
ஒவ்வொரு தாள் உதிரும்போதும்
நம்மை நோக்கி கூர் தீட்டுகிறது.
சோதிடனுக்கு தொன்மைப்பெயர்
வள்ளுவன் என்பது.
அந்த வள்ளுவன் வாய் மலர்ந்தது
கேளிர்!
"நாளென ஒன்று போல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார் பெறின்"
அதற்காக‌
அஞ்சத்தேவையில்லை.
உதிர்ந்த தாள்களை சேகரியுங்கள்
அந்தக்காலத்தில்
அது
பல்பொடி பொட்டலம் போட உதவும்.
இன்றைக்கு
உங்கள் வாழ்(ந்த) நாட்களை
ரீ சைக்ளிங்க் செய்துகொள்ளலாம்.
அதில்
நீங்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சியை மட்டுமே
ரீ சைகிள் செய்யுங்கள்.
உங்கள் வாழ்விற்கு
புதுப்புது "நேனொ செகண்டுகள்"
சிறகுகள் முளைக்கச்செய்யும்.
மனிதன் என்பதன் அர்த்தமே
மகிழ்ச்சி தான்.
வாழ்த்துக்கள்!!!!!!!!!!!
_____________________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக