ஞாயிறு, 22 ஜனவரி, 2017

மெரீனா குறும்பாக்கள்மெரீனா குறும்பாக்கள்
=======================================ருத்ரா இ பரமசிவன்


கடல் உள் வாங்கிக்கொண்டது
இப்போராட்ட அலையின்
அதிசயம் கண்டு.


வாட்ஸ் அப்பும் முகநூல்களும்
கத்தியின்றி ரத்தமின்றி
கண்ட குருட்சேத்திரம்.


"காளையின் படம் வரைந்து
பாகங்களைக் குறி".....விடைத்தாளில்
எரிமலையின் படம்..


ஜல்லிக்கட்டா ? பீட்டாவைக்கேள் என்றவர்கள்
அவசர கூட்டங்கள் போட்டு
பெற்றெடுத்தார்கள் அவசர சட்டத்தை.!


செல்போன்கள் இரவுக்கு இட்டன
நிலாப்பிஞ்சுகளில்
முத்துப்பந்தல் தனை!


எல்லோருடைய கண்களிலும் தெறித்தது.
எல்லோருடைய குரல்களும்  ஒலித்தது
உலகத்தமிழின் ஒரே இதயம்!

===========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக