வியாழன், 5 ஜனவரி, 2017

மாங்காய்ப் பாலுண்டு


https://36f9fea5-a-62cb3a1a-s-sites.googlegroups.com/site/nips2012topology/home/torus.png?attachauth=ANoY7crL6tgegJ9xlYFKBaP5qL9vjIQCGOXLU0xrByfm4c-XuqzailpLb-qLegviZLPAl2ed_aF9luHoeuKyWRhJHpOpFdvBfPIh079E3PfyVb9gCUfLtWrQKUIsafb-xuxHz9pBhRk4l_FLxhcc_4lCvjE8Q0C37VNKh08ChGrzeghCE1ei6FiZr4PaoRVBdsQsSml9bwyVTbFQQhgwTGjeZlL3i7EGDQ%3D%3D&attredirects=0
==========================================================================





மாங்காய்ப் பாலுண்டு...(1)
=======================================ருத்ரா

"வெட்டவெளியில்..."

குதம்பைச்சித்தர் வகுப்பு எடுக்கிறார்.வாருங்கள் பல்கலைக்கழக அறிவுச்சிகரங்களே!கேளுங்கள்.சொல்லை தோண்டி தோண்டி நீங்கள் கற்பனையில் கண்டு வியந்த புழுக்கூட்டை (வொர்ம் ஹோல்)அவர்
பாணியில் கேட்டு களிக்கலாம்.மாங்காய்ப்பாலும் தேங்காய்ப்பாலும்.
அடையாளங்கள்.அவற்றின் பின்னணித்திரை விலக்கி அதன் உட்பொருளும் உய்த்து அறிய ஆவல் கொள்ளுவதே மனித சிந்தனையின் நோக்கம்.சிந்திக்கும் நோக்கம் வேண்டாம். அதனைப்பற்றியெல்லாம் ஒரு பாறாங்கல்லை எப்போதும் தலையில் சுமந்து கொள்ளவேண்டாம் என்பதும் சித்தர்களின் சிந்தனை தான்.அச்சு முறியும் எல்லை தொடும் வரை இந்த மயிற்பீலிகளை நிரப்பு.இலேசாகவே சிறு சிறு கற்களைத்தூக்கு அந்த தட்டாம்பூச்சியைப்போல். கண்ணடிச்சிறகுகள் பட படவென்று துடிக்கும்.சிறுபயல்களுக்கு அது விளையாட்டு. அது அறிவு வேட்கையும் வேட்டையும் ஆகும். அப்படியொரு விளையாட்டு தான்.துறவு எனும் மலைமுகட்டை இப்படி கற்பனை செய்துகொள்ளுங்கள்.அது எல்லையின்மை(இன்ஃபினிடி) எனும் உயரத்தில் இருப்பது.
கருவில் உயிர் வடிவம் கொள்ளும் முன் அதன் சாறு (அப்ஸ்ட்ராக்ட்)எப்படியிருக்கும்.அதனை கற்பனை செய்யும் முன்
அந்த ஃபெலோபியன் குழாய் பிதுக்கும் முட்டைகளும் (அறிவுப்பிழ‌ம்புகளும்) அதை ஊடுருவும் வாலறிவு ஊசிகளும் (ஸ்பெர்மாடஸோவா) எந்த குவாண்டம் மெகானிக்ஸில் "ஒரு உந்தம்" கொள்கிறது? என்று சிந்தனை செய். ஆராய்ச்சி செய்.இடையில் அந்த ஆத்திக நாத்திகங்களை குப்பையில் போடு.பொறிகளே பால் பிடிக்காத மூளிப்பிண்டத்தில் "மாங்காய்ப் பாலிலும்" "தேங்காய்ப்பாலிலும்"அரைத்துவிட்ட குழம்பு சாப்பிட நாவில் நீர் ஊற விடுவதில் எந்த பொருளும் இல்லை.இருப்பினும் மனிதன் தன் கற்பனைப்பிண்டத்தை உள்ளுணர்வில் பிசைந்து விஞ்ஞானம் செய்கிறான். காஸ்மாலஜியை"ப்ரக்ஞான கனம்" என்பதும் இது தான்.சித்தர்கள் எளிதாக ஆனால் அருவமாய் சிந்திக்கிறார்கள்.வாழ்க்கை  என்பது வெறும் (புலன்களின்) ருசி அல்ல.அதற்காக ஏங்குவதும் தேங்குவதும் ஆன தேங்காய்ப்பால் எதற்கு மனத்தில் இருக்கும் (கற்பனை)மாங்காய்ப்பால் இருக்கும்போது?"தேங்காய்ப்பால் ஏதுக்கடி?"என்னும் சித்தரின்
முதல் ஞானச்சொடுக்கு இது.இந்த "சுளீர்" வலிக்காது.ஆனால் இனிக்கும்.பருக பருக சுவைக்கும்.இதுவரை நீ சொன்ன வேத வேதாந்தங்கள் எதற்கு? இன்னும் உன் மனதில் இருப்பதை(மனப்பால்) குடித்துப்பார்.இந்த "சித்தம் போக்கே" சிவப்போக்கு.சாஸ்திர சம்பிரதாய கோடுகளை உடைத்து புதிது புதிதாய் மைல் கற்களை நட்டுக்கொண்டே போ என்கிறார்கள் சித்தர்கள்.இங்கே கனவு கூட அறிவியல் சித்தனை எனும் மாங்காய்ப்பாலை
நம் மூளையின் மூலை முடுக்குகளில் கிடக்கும் "வெட்ட வெளியில்" கூட சுரக்கச்செய்யும்.

"வெட்ட வெளியில்" மைல்கற்கள் நடுவோம் வாருங்கள்.
"ஜேம்ஸ் ஆர்.மங்க்ரிஸ்"(மாஸச்ச்சூஸட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி)என்பவர்  "டோபாலஜி" என்றொரு கணித நூல் (போஸ்ட் ரிசர்ச் மாணவர்களுக்கு) எழுதியிருக்கிறார்.சித்தரின் வெட்டவெளியை அவர் கொடுத்த தலைப்புகளில் சொருகிப்பார்த்து களிக்கின்றேன்.
அவை இவை தான்...

(பக்கம் 228)(ப்ரென்டைஸ் ஹால் ஆஃப் இந்தியா ..பதிப்பு 2006)
ஸ்பேஸஸ்...

1.கன்னெக்டெட்
2.பாத் கன்னெக்டெட்
3.லோகலி கன்னெக்டெட்
4.லோகலி பாத் கன்னெக்டெட்
5.காம்பேக்ட்
6.லிமிட் பாயிண்ட் காம்பேக்ட்
7.லோகலி காம்பேக்ட் "ஹாவுஸ்டார்ஃப்"
8.ஹாவ்ஸ்டார்ஃப்
9.ரெகுலர்
10.கம்ப்ளீட்லி ரெகுலர்
11.நார்மல்
12.ஃபர்ஸ்ட் கவுண்டபிள்
13.செகண்ட் கவுண்டபிள்
14.லிண்டெலோஃப்
15.கவுண்டபிள் டென்ஸ் சப்செட்
16.லோகலி மெட்ரைஸபிள்
17.மெட்ரைஸபிள்.
18.உரிஸ்ஸோன் மெட்ரைசேஷன் தியரம்
19.இம்பெட்டிங் தியரம்
20.டீயெட்ஸ் எக்ஸ்டென்ஷன் தியரம்.
21.இம்பெட்டிங் ஆஃப் மேனிஃபோல்ட்ஸ்.
22.டைகொனாஃப் தியரம்.
22 ஆவது நிலையே ஆழம் உயரம் ஆழ்வு ஆள்வு எல்லாம்..
மைல்கற்கள் பற்றி அறிவதற்கு சித்தரின் குகைவழி புகுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக