திங்கள், 2 ஜனவரி, 2017

புத்தாண்டு வந்தது

புத்தாண்டு வந்தது
====================================ருத்ரா இ.பரமசிவன்

கடிகார "முட்களில்"
நம் ரோஜாக்களின்
ஆர்ப்பாட்டம்.

மூளியான காலப்பாம்பின்
சட்டைகள் உரித்து
சட்டைகள் உடுத்தினோம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்.
கழிந்தது புதியது ஆயிற்று.
புகுந்தது கழிந்தது ஆயிற்று.

அம்பது அறுபது ஆண்டுகள்
கிலோவுக்கு பத்துரூபாய்.
பழைய காலண்டர்கள்.

பூமியே சுற்றாதே கொஞ்சம் நில்.
நாங்கள் எந்த இடத்தில் ஆணி அடிப்பது?
எங்கள்  காலண்டரை மாட்ட!

========================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக