ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஜனவரி முப்பது


ஜனவரி முப்பது
==========================================ருத்ரா

ஜன வரிகளை
நெஞ்சில் தாங்கியதற்கா
அவரை நோக்கி
அந்த தோட்டாக்கள்?

ஏ ராமா!
இது தீனக்குரல் தான்.
ஒரு ராம் நோக்கிய‌
இன்னொரு ராமின்
தீனக்குரல் இது!

தியாகம் அலைஅடிக்கும்
பெருங்கடலை
சில விநாடிகளுக்கு
நம் "உள்ளங்"கையில்
ஏந்துவதற்குள் நம்மை
ஏழுகடல்கள் வியர்த்து நிற்கும்.

அஹிம்சை எனும்
சிலபஸ்
நம் வாழ்க்கைப்
ப‌ல்கலைக்கழகங்களிலிருந்து
நீக்கப்படவே முடியாது?
தொப்பூள் கொடியை அறுத்து
மனிதம் ஒலிக்கச்செய்யும்
அந்த ஹிம்ஸையைத்தவிர.

ஹிம்சையின் சின்னமாய்
நம் கடவுளர்கள் கையில்
எத்தனை ஆயுதங்கள்?
"சைரன்" ஒலிக்கும்போது
அவை கீழே எறியப்படுமானால்
மனிதன் கடவுள் முன்னே
காட்டுவான் விஸ்வரூபம்!

மீசை கூட முற்றாத‌
அந்த வீர இளைஞன்
காஷ்மீர பனிச்சரிவில்
உயிர் மூச்சை உதிர்த்தபோது
தியாகத்தின் கனபரிமாணம்
நமக்கு புரிந்தது
கண்களில் முத்துக்கள் கோர்த்து.

ரத்தம் வழிந்த சிலுவையில்
தியாகம் செறிந்த
அந்த பச்சைப்பிறை நாயகத்தில்
எல்லாம் ஊடுருவி கசிந்தது
அந்த‌
"ரகுபதி ராகவ ராஜாராம்"

=================================================
https://www.google.co.in/imgres?imgurl=http://www.thefamouspeople.com/profiles/images/mahatma-gandhi-31.jpg&ihtmgrefurl=tp://www.thefamouspeople.com/profiles/mahatma-gandhi-55.php&h=500&w=600&tbnid=lsJrGogs-B6M6M:&vet=1&tbnh
==========================================================
with THANKS for PHOTO with the above LINK


Related image


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக