திங்கள், 9 ஜனவரி, 2017

பொங்கல் குறும்பாக்கள்

பொங்கல் குறும்பாக்கள்
========================================ருத்ரா இ பரமசிவன்.

பாகிஸ்தானுக்கு கூட‌
காஷ்மீரை கொடுத்துவிடுவீர்கள்.
தமிழன் "பொங்கலுக்கு"
விடுமுறை தர மாட்டீர்கள்!

இஞ்சி மஞ்சள் கரும்பு
சூரியனுடன் பொங்கல்...இந்த‌
தமிழுக்குள் ஆயிரம் இந்தியாக்கள்!

பாற்கடல் கடைந்ததில்
அமுதமாய் தமிழ் வந்தது.
ஆலகாலமாய் "பீட்டா" வந்தது.

கங்கைக்கரையில் கல்லில் தான்
வள்ளுவனுக்கு சிலை வைத்தீர்கள்
தமிழின் உயிர் இல்லாமல்.

காளையை கொல்லுவது
அந்த ஷரத்துக்கள் தான்.
தமிழன் உணர்வை கொல்லுவதற்கா
"வந்தேமாதரம்" ?

உங்கள் "தண்ணி காட்டும்"
பாலிடிக்ஸ்க்கு
எங்கள் காவிரி தான் கிடைத்ததா?

"இன்று ரொக்கம் நாளை கடன்"
என்பது போல் தானா உங்களுடையதும்?
"ஜல்லிக்கட்டு" உண்டு அடுத்த ஆண்டு!

==============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக