சனி, 15 மார்ச், 2025

Neuralink

 

நரம்பு முடிச்ச்கள்

__________________________________


ஆத்தா 

ஆடு கேட்டாள்

கோழி கேட்டாள்

என்று சொல்லித்தான்

அதை தின்று கொண்டிருக்க‌

வேண்டுமா?

கிரேக்க நாட்டு 

"டெல்ஃபிக் ஆரகிள்"கூட‌

இப்படி 

சாமியாடிகள் 

சலம்பியவை தான்.

அது இன்று 

"ப்ரோகிராம் ஆகி

டேட்டா விஞ்ஞானம் ஆகி

குவாண்டம் ஆகி

குட்டி போட்டு

பிரபஞ்சங்களையே

மனிதனின் மனக்கணக்கில்

பதிந்து கொண்டிருக்கிறது.

மூளையின் நரம்பு 

ஒட்டங்களையே

செய்ற்கை வாய்க்கால்

வெட்டி

மனிதனின் மன வளம் மற்றும்

நாட்டின் வளங்கள் எல்லாம்

வாரிக்குவிக்க‌

வரிந்து கட்டிக்கொண்டிருக்கிறது.

தமிழா!

நீ சாமியாடியது போதும்.

சரித்திரம் பேசும்

விஞ்ஞானமாய்

விந்தைகள் ஆற்றிட வா!

_________________________________________

செங்கீரன்



Neuralink’s Mesmerizing Vision for the Future of Humanity | Watch

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக