ஓட்டமும்
நடையுமே வாழ்க்கை.
கனவும் நனவுமாய்!
எது அது?
எது இது?
தெரிவதற்கு
தேடுகிறேன்
வாழ்க்கையை.
கருப்பைக்குள் கேட்ட குரலே
கேள்வி.
வெளியே
கேள்விக்கு கேள்விகளே
பதில்கள்.
கேட்டதும் சொன்னதும்
கடவுள் தான்
என்றார்கள்.
அறிவைத்தேடி
எனக்குச் சொல் என்றான்
கடவுள்.
அறிவைத்தேடித்தானே
அறிவைக் கண்டு பிடிக்க முடியும்.
அதனால் தேடினேன்
ஓட்டமும் நடையுமாய்.
ஆனாலும்
அங்கே
கடவுளில்
ஏன்... எதற்கு ?
இந்த ஈசல்கள்
மொய்த்துக்கொண்டிருக்கின்றன.
மிஞ்சியது எல்லாம்
இருட்டு மிச்சத்தின்
இறகுக்குவியல்களே!
____________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக