புதன், 19 மார்ச், 2025

சிட்டுக்குருவிகளின் உலக தினம்.

 

சிட்டுக்குருவிகளின் உலக தினம்.

______________________________________

சொற்கீரன்.


சிட்டுக்குருவி சிட்டுகுருவி

சேதி தெரியுமா?

ஆமாம்.

அம்பதுகளிலிருந்தே

அந்த நீண்ட ஒலிக்குழாய்கள்

வழியே

கல்யாண வீடுகளிலும்

சடங்கு விழா வீடுகளிலும்

கேட்டுக்கொண்டே இருந்தகுரல்

இன்றும் கேட்கிறதா?

மனித சாதிகளாய்

வர்ணம் தீட்டி

"தீட்டு"களின் தீவுகளில்

முடங்கிக்கிடந்தவர்கள்

இது வரை என்ன செய்ய முடிந்தது?

மீசை முறுக்கிய கவிஞன் கூட‌

காக்கை குருவி எங்கள் சாதி

என்று

சிறகு பரப்பினானே!

இன்னும் இங்கே

அதன் கூர் நகங்கள்

கூறு படுத்தும் திட்டங்களில் தான்

இருக்கின்றன.

உலகதினங்களின் பட்டியல்

நிரம்பி வழிந்து விட்டதே!

இருந்தால்

பிளவு வாதங்களின்

"வர்ணங்கள் தீண்டாத மானிடம்"

என்று ஒரு தினம்

கொண்டாடலாம்.

சிட்டுக்குருவியே ..அதன்

முதல் "ட்விட்டரை"

நீயே

சிறகடித்து சிறகடித்து

குரல்களை சிலிர்த்து விடு!

வாழ்க!வாழ்க!!

சிட்டுக்குருவிகளே!

கருடன்கள் ஜாக்கிரதை!


______________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக