நினைவின்
சரங்கோர்த்தலில்
உள்ளே
அடை மழை.
நத்தைக்கூடாய்
சிறு சிறு நிழல்கள்
அடக்கிய
சிலிர்க்கும் நிகழ்வுகள்.
கொஞ்சம் எட்டி நெளித்து
தொட்டு சுவைத்ததில்
பச்சைப்புல் பளிங்கில்
ஏழுவர்ணக்கடல்.
வாழ்வின் கீற்று
ஊழிக்காற்றிலும் சிலுப்பியது
பேய்க்கூந்தலை.
வானம் முடைந்த
மூளிப்பந்தலில்
இரவெல்லாம்
நடசத்திர சவங்கள்!
ஆனாலும்
முணுக் முணுக் என்று
அவை அழுவதே
இன்றும் எங்கும்
எழுதப்படாத இலக்கியங்கள்.
____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக