ஒரு முடிதிருத்தல்.
________________________________________
சவரக்கத்தியின்
சிகையலங்காரத்தில்
அத்தனை மயிர்களுமா
சவங்கள்?
குஜராத் குடிசைகளை
போர்த்திய வெள்ளைத்துணியை
கொண்டா
அங்கே போர்த்தினார்?
எழுபத்தி ஐந்து ஆண்டு சவம்
இந்த ஜனநாயம்
என்று தெரியாதா?
அப்புறம் ஏன் இந்த
கும்பமேளாவின்
பன்னீர் ஷவர் இதன் மீது?
எங்கோ இற்று விழுந்த
உடலுக்கான
சட்டப்புத்தகத்துப்
பெட்டிக்கு
இத்தனை ஆணிகளா?
வெள்ளைக்காரன் பூசி மெழுகி
தந்த சுதந்திரத்திற்குள்
சனாதனத்தின்
இத்தனை கழுவேற்றங்களா?
சார்!
கண்ணாடி பாருங்கள்
சரியா இருக்கா?
பரவாயில்லை....பின்னால் கொஞ்சம்
ஸ்லோப் வைத்திருக்கலாம்.
நன்றாகத்தான் இருக்கிறது
விடுங்கள்.
அந்த முடிதிருத்தும் கலைஞர்
சூட்டிய மகுடத்துடன்
வீடு திரும்பினேன்.
இனிமேல் தான்
தீர்மானத்துக்கு ஓட்டெடுப்பு!
_____________________________________________________
சொற்கீரன்
06.03.2025
(கத்திரி உபயம் ஈரோடு தமிழன்பன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக