மூளைக்குள் ஒரு "பிக் பேங்க்"
___________________________________
இதோ பாருங்கள் இந்த
குவாண்டம் கம்பியூட்டரை!
சூப்பர் கம்பியூட்டர்களுக்கு
மில்லியன் வருடங்கள் பிடிக்கும்
ஒரு கணித செயலை
விரைந்து சில நிமிடங்களில்
முடித்து விடும்
"குவாண்டம் விஞ்ஞானத்தை"
இதில் "தரிசிக்கலாம்"
டி அலை எனப்படும் நுட்பம்
"ப்ளாக் செயின்" கணிப்பு மூலம்
நினைத்தால்
மொத்த வானத்தையும்
தன் க்யூபிட் நாக்குகளில்
சுருட்டி விழுங்கி விடும்.
பயமாக இருக்கிறது அல்லவா!
மடியில்
ஆயிரக்கணக்கான பில்லியன்களை
வைத்துக்கொண்டு
பங்கு மூலதன விளையாட்டில்
அவற்றை இன்னும்
பல பில்லியன்களாக
பெருக்கிக்கொண்டிருக்கும்
இந்த "டெக்" தொழில் புலிகள்
நாக்கில் நீரூற நீரூற
காத்துக்கொண்டிருக்கின்றன.
"பெருவெடிப்பு" திரிமுனையையே
திசை திருப்பி விட்டு
பிரபஞ்சங்களையே தன்
செல்ல பொமரேனியன்களாய்
மடியில் வைத்து கொஞ்சிக்கொள்ளும்
காலமெ இப்போது
நம் பிடரியை பிடித்து
உந்திக்கொண்டிருக்கிறது.
இந்த பணக்காரர்கள்
தங்கள் "பிட் கரன்சி"க்குவியல்களுக்கு கூட
குவாண்டம் சாவிக்கொத்துக்களை
தங்கள் விரல்களில்
சுழற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு
செவ்வாய் கிரகமும்
"ப்ளாக் ஹோல்"களும்
ஒன்று தான்.
அங்கே தங்கள்
குமிழிகூடுகளில்
இருந்து கொண்டு
எல்லாவற்றையும்
எல்லோரையும்
ஆளலாம்.
அந்த மேதை "ஸ்டீஃப்ன் ஹாக்கிங்"
இதை முன் உணர்ந்து
எச்சரித்து விட்டுப்போயிருக்கிறார்.
___________________________________
இ பரமசிவன்
A simulated universe works better when dark energy changes over time
World-first: US quantum computer solves problem million years faster than supercomputer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக