சனி, 15 மார்ச், 2025

"ரூ"பாய்.

 

"ரூ"பாய்.
_____________________________
ஆட்டையும் மாட்டையும்
ஒட்டுதல் செய்து
அவதாரச்சித்திரம்
ஆக்குதல் போல்
ஆங்கிலமும் இந்தியும்
தழுவிக்கொண்டதையா
சூடிக்கொள்வது?
நிதியம் செழிக்கும்
"ரூ"பாய் நோட்டில்
கருப்புப்பொட்டாய்
எதற்கு இனி அதற்கு?
தமிழ்க்கணப்பு
மூட்டும் இன்பமே
எங்கள் மூச்சின்
துடிப்புகள் ஆகும்~
இதில் இமயமும் உயரும்
காட்சிகள் தெரியும்.
எங்கள் பொதிகை
பூத்திடும்
தமிழும் தெரியும்.
"தேசவிரோதம்"எனும்
எக்காளம் ஊதும்
எத்தர்களே!
ஆங்கிலேயன் தன்
ஆட்சிக்கயிற்றில்
"இங்கிலீஷ் கொக்கியும்
இந்தியின் சுழியும்"
சேர்த்துச்செய்த‌
தூண்டிலா
எங்கள் தேசியம்
இழிப்பது?
ஆங்கிலம் அவனுக்கு
சுரண்டல் மொழி.
இந்தியோ
இந்திய மொழிகள்
எத்தனை எத்தனையோ
விழுங்கிய மொழி?
இதுவா தேசிய முத்திரை?
தேசியம் தின்ற‌
அசுர மொழியா நம்
செல்வம் எனும்
கரன்சியைத் தின்பது?
ரூபாய் என்பது
எங்கள் பட்டி தொட்டியில்
பதியம் ஆனது.
இந்த மண்ணின் மூச்சுக்
காற்றே ஆனது.
அர்த்தம் இல்லா
வெறிப்பேச்சு
வேண்டாம்.
நாட்டின் ஒற்றுமை
ஒவ்வொரு
நரம்பு முடிச்சில் தான்
நாதம் இசைக்கும்
அறிவீரோ?
_____________________________________
செங்கீரன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக