சரி...சொல்லு.
_______________________________________________________
சொற்கீரன்
என் தலைக்குமேலும்
ஒரு தலையா?
ஆம்.
அது வெற்றுத்தலை.
கீழ்த்தலையில் தான் சாவி.
அதைக்கொண்டு
மேல் தலையை திற.
அறியாத தலையில் தான்
இருப்பதாய்
எல்லாம் எழுதி வைத்திருக்கிறோம்.
திறந்து பார்த்து சொல்.
அது ஏன்?
பக்கவாட்டில் தான்
ஆறேழு தலைகளை
அடுக்கி வைத்துக்கொண்டு
ஆரவாரம் செய்கிறீர்களே
அதில் எல்லாம்
உங்களை இன்னும்
கண்டு பிடிக்கவில்லையா?
எங்களைத்தேடித்தான்
உங்களைப்படைத்தோம்.
உங்களைத்தேடி
நீங்கள் கண்டு கொண்டதை
எங்களிடம் சொல்லிவிடுங்கள்.
அது எப்படி?
இருப்பதைத்தான் தேடி அறிவோம்.
இல்லாததை நாங்கள்
தேடுவதே இல்லையே!
அதைத்தானே கேட்கிறோம்
மனுசா?
என்ன வென்று?
எப்படி இல்லை என்று?
உங்கள் தலைகளைத்
திறந்து பார்த்துக்கொள்வது தானே?
அது இயலாது.
தலைகள் இல்லாத
பொய்க்கிரீடங்கள் மட்டுமே
எங்கள் புராணங்கள்.
சரி...சொல்லு.
எப்படி இல்லை என்று?
இந்த
"குவாண்டம் என்டேங்கில்மென்ட்"தான்
சொல்கிறது
இல்லை என்று!
எத்தனை கோடி ஒளியாண்டுகள்
அதாவது உங்கள் யுகங்கள்
தாண்டிப்பொய் நீங்கள் பார்த்தாலும்
அது சொல்லி விடும் இல்லை என்று.
இது எங்கள் "காரலேஷன்"தியரம்.
இங்கே இருக்கு என்றால் அங்கே அது இல்லை!
_____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக