மனிதம் ஒளிரும்.
_____________________________________
சொற்கீரன்
மறைத்து மறைந்து நின்று
"மனிதம்"மரக்கச்செய்தவையே
இந்த நான்கு மறைகள்.
மனிதா
இந்த "மறைகள்"கழன்றால் தான்
மனிதம் ஒளிரும்.
மரத்தில் மறைந்தது மாமதயானை.
மரத்தை ம்றைத்தது மாமதயானை.
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.
பரத்தை மறைத்தது பார்முதள் பூதம்.
இந்த திருமூலன் பாட்டில்
இல் ஐ என்ற் இரண்டு வேற்றுமை உருபுகளே
நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டிய
பல்கலைக்கழகங்கள்.
அதில் மறை.
அதை மறை.
அறியும் அறிவில் மறைந்து போய்
அறிவாக ஒளிர்கிறாய்.
அறிவை மறைத்த நீ
அந்த ஒளியை மறைக்கிறாய்.
நீ ஒரு தோற்றம் தான்.
அதுவே நான் அது அவன் அவள் என்பதும்
தோற்றங்களே
மறைத்துக்கொண்டு இருக்கும் இந்த
இலக்கணங்களை
விலக்கு
மனிதம் எனும் ஒளி மீண்டும்
பரவுகிறது.
_____________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக