இலக்கிய ஆளுமை நாறும் பூ நாதன்
அவர்களுக்கு ஒரு அஞ்சலி
_________________________________________
சிந்துபூந்துறை ஆற்றின்
அந்த மருத மரங்களோடு
கிளைகளில் இலைகளில்
அசைந்து அசைந்து
இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறாரே
புதுமைப்பித்தன்
அவரைத்தான் இன்று
காட்டுகிறீர்கள்.
கரிசல் இலக்கியத்து
கி ரா அவர்களின் சுவடுகளில்
உங்கள் எழுத்துக்கள்
சூடான கரும்புழுதியை
கிளப்பிய போது
சிவப்பு நாற்றுகளே
சிலிர்த்து எழுந்தன.
தமிழ் எழுத்துக்கள்
நம் நெல்லைச்சீமையின்
விபூதிக்காடுகளில்
புதைந்து போகாமல்
ஒரு புதிய சிவப்பு மயத்தை
அல்லவா
காட்டிச்சென்று இருக்கிறீர்கள்.
ஒரு பேரதிர்ச்சி தான் எங்களுக்கு.
வாசக பூமியின்
ரிக்டர் ஸ்கேலில்
அந்த சொற்களின் அதிர்வுகள்
கணிதக்கோடுகளை
உடைத்துக்கொண்டு
நொறுக்கியிருக்கின்றன.
உங்கள் கனவுகள் எங்களிடம்
என்றும் அடைகாக்கும்
ஒரு நாள் சிறகு விரிக்க!
எங்கள் மனம் ஆழ்ந்த அஞ்சலிகள்.
_________________________________________
செங்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக