அழகிய "அனக்கொண்டா"
____________________________________
ஒரு
சொற்களின் "அனக்கொண்டா"
என்னை விழுங்கிக்கொண்டிருக்கிறது.
அதன் உள் முறுக்கெலும்புகள் எல்லாமே
அவ்வளவு சுவை.
உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக
முறுக்கிப்பிழிவதில் கூட
தேன் பிரளயம்.
தமிழ் இலக்கணம்
வேப்பங்காய் என்பவர்கள்
இந்த உவமை அணிகளின்
நீண்ட உடற்குகைப்பயணம்
மேற்கொள்க!
இது பாம்பு அல்ல.
நம் வரலாற்று ஊர்தல்களின்
செதில்கள் அங்கே இங்கே
என்று இல்லாமல்
நம்
தமிழ் "ப்ரோட்டாப்ளாசம்..சைடோப்ளாஸம்"
எல்லாம் நிரவி நின்று
இனிய நீச்சல் பழகத்தரும்
கலைக்கூடம்.
சிந்துவெளி எலும்புக்கூடுகளைக்கூட
"பானிப்பூரி பேல்பூரிக்குள்"
கூழாக்கி வியாபாரம் செய்தால்
சூடாக வாங்கித்தின்று
நம்மை நாமே விழுங்கிக்கொண்டிருக்கிற
திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இந்த அவலங்களின்
தொல்(லை)க்காப்பியம் இன்னும்
நமக்கு நெருடவே இல்லையே.
நமக்கு விடியல் என்று எதுவும் இல்லை.
நமக்கு இருள் ஒளி என்றும் கூட
எதுவும் இல்லை.
நம் அகரமுதல இன்னும்
நம்மிடையே தான்
நெளிந்து கொண்டிருக்கிறது.
அழகிய மின்னல் துடிப்பின்
அனக்கொண்டாவாய்!!
___________________________________________
சொற்கீரன்.
___________________________________________
26-03-2025 ல்
:மிச்சப் பொழுதுகளால்.....
என்ற தலைப்பில்
ஈரோடு தமிழன்பன் அவர்களால்
எழுதிய கவிதை
என்னுள் இப்படி ஊர்ந்து கொண்டிருக்கிறது!
_____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக