VOYAGER 1
_______________________________________________________________________
வாயேஜர் 1
_________________________________________________
மனிதனின் எழுதிய
முதல் விண்வெளி அறிவியல்
நாவலின் கடைசிப்பக்கங்கள்
முற்றும் என்பதை நெருங்கி விட்டதே
என்ற ஒரு பெரும் சோகம்
இருந்த போதும்
புதிய புதிய பரபரப்புகளையும்
நமக்குத்தூவி விட்டுக்கொண்டிருக்கிறது.
இது வரை வெறும் "நாய்ஸ்" என
நாம் கவனிக்க முடியாத
அலை வரிசை நம்மை இப்போது
திகைக்க வைக்கிறது.
ஆம்!
நியூட்ரினோ பற்றிய
புதிய தர்வு ஒன்றை
அனுப்பியிருக்கிறது.
அது முடிவை நெருங்கிய போதும்
அது சீரான அலைவரிசையை
எப்படி நமக்குத்தருகிறது?
நம் ஏ ஐ மற்றும் குவாண்ட சிப்புகளின்
கூரர்மையான துருவல்கள்
முந்தைய நாய்ஸ்களை
அலைவரிசையாக்கி அது தருகிறதே
அது எப்படி?
சூரிய ஆட்சியிலிருந்து விடுபட்ட
விண்வெளியியலின் புதிய கணிதத்தை
நமக்கு திறந்து காட்டியிருக்கிறதா?
ப்ரைம் நம்பர்கள் எனும் பகா எண்களுடன்
அதன் கணிதக்குழைவுகள்
ஒரு புதிய தர்வு ஒன்றைக்காட்டுகிறது.
நியூட்ரினோ
தொட்டாற்சிணுங்கிகளிலேயே
மிக மிக சிணுக்கம் காட்டும்
புதிர் அலை அல்லவா?
அது எப்படி இப்படி
வாயேஜர் 1 ல்
அதன் மகுடிக்கு அடங்கிய நாகமாய்
அலைவரிசைப்படத்தை
காண்பிக்கிறது என்று
விண்வெளி விஞ்ஞானிகள்
மூக்கில் வைத்த அந்த வியக்கும் விரல்களை
இன்னும் எடுக்கவே இல்லையாம்!
இது குவாண்டம் சிப் எனும்
ஜீ பூம்பா வேலையோ என
பரபரப்பு அடைந்திருக்கிறார்கள்
நாசா விஞ்ஞானிகள்.
__________________________________________________
சொற்கீரன்
Voyager 1’s Final Transmission Contained a Neutrino Pattern That Shocked the Scientific World
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக