பிம்பம்
________________________________
உற்று உற்றுத்தான் பார்க்கிறேன்.
கொம்பு முளைத்திருக்கிறது.
எல்லா காலக்ஸிகளுக்கும்
இது தான் ஆண்டினாவாம்.
முகம் பூராவும் கண்கள்.
முதுகிலும் தான்.
மயிர்க்கால்கள் ஒவ்வொன்றிலும்
"ஃபோட்டான்கள்" ஓடுகின்ற
கண்ணாடி இழைகள்.
ஏ ஐயில் உருவாக்கி
விண்வெளியில் மிதப்பதாய்
உருவாக்கிய
"ஸ்பெர்மாட்டொஸோவா"
என்று ஒளி வேகத்தையும்
மிஞ்சிய அலைவரிசையில்
சதைக்கூழில் கொஞ்சம்
மூளைச்சிப்பும்
செருகியிருக்கிறார்கள்.
எனது "மிஷன்"
எங்காவது
கடவுளின் செல் நெளிகிறதா
என்று
துருவுவது தான்.
நான் தேடுவதோ
என்னை மாதிரி ஒரு
பெண் செல்
இங்கு எங்காவது
துடித்துக்கொன்டிருக்கிறதா
என்று
துருவது தான்!
______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக