மனோஜ்பாரதிராஜா.
_____________________________________\
ஒரு இயக்குநர் இமயம்
ஒரு குட்டி சிகரத்தை
தன் அருகேயே வைத்திருந்து
ஒளிச்சுடரேந்தியாய்
உயர்ந்திட செய்து கொண்டிருக்கும்
வேளையில்
இந்த சோகம்
பெரிது பெரிது
மிகவும் பெரிது.
ஒரு "தாஜ்மகால்" பொம்மைக்குள்
காதல் துடிப்புகளை
சேமித்து வைத்து
ஒரு பிரளயத்தின் பூவாய்
காதல் விரித்த அந்த
நடிப்பு போல
இன்னும் சாதிக்க வேண்டும் என
நினைத்த அவர் இதயம்
ஏன் நின்றது?
எப்படி நின்றது?
அந்த தந்தை
காமிராவுக்குள்
எத்தனை உலகங்கள் படைத்தார்?
இதைத் தாங்க
எந்த மேகமண்டலங்களை
புகை கொண்டு உருவாக்குவார்.
காதலின் நிறம் மாறாத பூக்களை
நம் கண் முன் நிறுத்தியவரின்
கண்ணீர் வெள்ளத்தை
எந்த பூக்கள் கொண்டு ஒற்றி எடுப்பார்?
"ஆக்ஷன்..கட்"என்று இரண்டு வசனங்களில்
கோடம்பாக்கத்து கோட்டையை ஆண்ட
திரை இலக்கிய கோமகன்
தன் அன்பு மகனை பறிகொடுத்து விட்டு
இனி எந்த வசனங்களை
உச்சரிப்பார்.
என் இனிய தமிழ் மக்களே
என்று வாய் நிறைய அழைக்கும்
அவர் தழு தழுத்த குரல்களுக்கு
நம் இதய ஆறுதல்கள் கொண்டு
அணை கட்டுவோம்.
நம் ஆழ்ந்த அஞ்சலிகள்
மனோஜ் பாரதிராஜாவுக்கு.
_______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக