செயற்கை மூளை வாங்கலை.யோ
செயற்கை மூளை?
கூடை நிரம்பி வழிகிறது.
வாங்க ஆளில்லை.
ஏன் இது?
"பில்லியன் டாலர்" கொஸ்டின் தான்.
மீண்டும் ஏன் இது
என்று கேட்காதீர்கள்.
பங்கு வர்த்தகம் எல்லாம்
பிரம்ம ரகசியம்.
இதைச் சிந்திக்கும்
இயற்கை மூளைகளை இன்னும்
பிரம்மன்
படைக்கவில்லையாமே!
___________________________________________
செங்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக