தெக்குப்பூத்தெரு.
____________________________
சன்னல்
நீலவானத்தை
துண்டு போட்டுக்
காட்டிக்கொண்டே
இருந்தது.
இரும்புக்கம்பிகள்
பூக்களாய்
இலைகளாய்
அதிலும் உட்கார்ந்து
கொண்டிருக்கிற
சிறு குருவிகளாய்
வண்ணம் பூசிக்
கிடந்தது.
வடிகட்டி வரும் வெயில்
அந்த இலைகளையும் கூட
ஏதோ அடையாளம் தெரியாதவர்களின்
இதயங்களாகத்தான்
நிழல்கள் காட்டியது.
எத்தனை வெப்பமானாலும்
சூரியனின் முத்தம்
அமுதத்தை தான்
102 டிகிரி இனிப்பில்
அல்வா கிண்டி கொடுத்தது.
சுள்ளென்ற வெயில் பாகிலும்
இருட்டுகடை அல்வா
கம்பிகளில் வழுக்கியது.
இது என்ன நினைவுகள்?
திலி டவுன்
தூசி படிந்த வீதியில்
ஏதோ ஒரு வீட்டு மாடியில்
அப்பிய நீலம் குழைத்த
சுண்ணாம்புச்சுவரில்
பளீரிட்ட
வெண் சிரிப்பு
என் நினைவின் ஒரு
மகரயாழ் நரம்புகளில்
அதிர்வுகளை அள்ளித்தெறித்தது.
தூரத்திலிருந்த
குறுக்குத்துறை மண்டமும்
தாமிருவருணியின்
பச்சைப்பளிங்கின்
சள சளப்புகளும்
நிமிண்டிக்கொண்டே இருக்கின்றன்.
அட1 என்ன இது?
என்ற அந்த "நோஸ்டாஜிக்"கை
காறி உமிழ்ந்தாலும்
அதன் படலங்களில்
தேனாற்றுத்திவலைகள் தான்.
பாலாற்றுப் பூநுரைகள் தான்.
அந்த நினைவுக்குமா
இனிப்பில்
இத்தனை தினவு?
____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக