செவ்வாய், 25 மார்ச், 2025

"ஹுசைனி"

 "ஹுசைனி"

_____________________________________


ஒரு நம்பிக்கையின்

கனபரிமாணத்தை

ஆயிரம் இமயங்களுக்கு'

சமமாக 

இறுதி வரை

நிறுத்துக்காட்டிய‌

மனித மாவீரன்.

எப்படி இவர்

விளம்பரக்காடுகளின்

இலைக்கண் வெளிச்சங்களின்

ஊசி குத்தல்களிலிருந்து

விலகி நின்றார்.

இவர் தொடாத கருப்பொருள் 

உரிப்பொருள்கள்

எதுவுமில்லை.

"கவரப்படவேண்டும் என்ற‌

அரசியல் ஆபாசங்களை

களைந்து நின்றவர்.

"ஜேக் ஆஃப் ஆல் ட்ரேட்ஸ்

பட் ஆல்சோ

மாஸ்டர் ஆஃப் ஆல் ஆர்ட்ஸ்"

தன் இறுதி முற்றுப்புள்ளியைக்கூட‌

கலை நேர்த்தியோடு

பூத்தையல் செய்து கொண்டிருந்தவர்.

ஓ!

அன்பான சிறந்த மனிதனே!

எங்கள்

நினைவுகளின் கூழாங்கற்களிடையே

சர சரக்கும் உன்

மாணிக்கத்தருணங்கள்

விலை மதிப்பற்றவை.

வாழ்க நீ!

ஆம் இந்த காலத்தை

சல்லடையாக்கிக்கொண்டு

நீடூழி காலத்துக்கு

உன் உள்ளக்கூர்மையை

அம்பு விடு!

_______________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக