சுனிதா வில்லியம்ஸ்..
__________________________________
சுனிதா வில்லியம்ஸ் மற்றும்
குழுவினர்
மண்ணில் காலடி வைத்து விட்டனர்.
அம்மாடி..
இப்போதான் மூச்சு விட்டுக்கொள்ள
முடிகிறது.
மனித வரலாற்று ஏடுகளில்
இவர்கள்
தனியே ஒளிவீசும் நட்சத்திரங்கள் தான்
என்பதில் ஐயமே இல்லை.
இவர்களுக்கு நம்
வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!
விண்வெளிக்கும்
மண் வெளிக்கும்
இடையே உள்ள மவுனம்
இப்போதெல்லாம்
விண்கோள் ஏவுகணைகளால்
குத்தி குத்தி
கிழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
விஞ்ஞானப்போட்டிக்குள்
ஏதோ நடக்கிறது.
தனியார்களும்
அந்த விண்வெளியில்
கரிவாயுக்குப்பைகளைக்கொண்டு போய்
கொட்டுகிறார்களோ?
என்றைக்காவது
நம் பூமிக்கு மூச்சு முட்டும்போது
தெரியும்.
கணனிப்படங்களில்
தினம் தினம் காட்சிகள்
உமிழப்படுகின்றன.
விட்டால்
செவ்வாய்க்கோளில்
ஏலியன்கள் கல்யாணம் செய்துகொண்டு
டும் டும் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்
என்று
யூ டூப்புகள்
பரபரப்பு காட்டி
காட்சிகளை சூடாக விற்பனை
செய்து கொண்டிருக்கலாம்.
மனிதனின் தலைகீழ் பரிணாமம்
இனி சொல்லும்.
மனிதன் இனி கருதரிப்பது எல்லாம்
செயற்கைமூளை
"சிப்"புகளிலிருந்து தான்.
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக