புதன், 19 மார்ச், 2025

கடல்நுரைகள்...4

கடல்நுரைகள்...4

-------------------------------------------------------------


காவிரிப்பூம்பட்டினங்களை 

விழுங்கிய கரைகளில் 

நம் வரலாற்றின் நுரைகள் 

இன்னும் இன்னும் 

மகுடங்கள் 

சூட்டிக்கொண்டுக்கொண்டு 

நம் கால்கள் நனைக்கின்றன.

"பாலை"ப்பண்ணில் 

ஒரு பெரும் பேர் "சிம் ஃ பொனியை"

மீட்டி மீட்டி 

ஆயிரம் ஆயிரம் கைகளை 

அலைகளாய் விரித்து 

அந்த மூச்சப்புயல்களை 

மேலெழுப்பியது யார்?

அந்த பனை  ஓலைசுசுவடிகளில் 

"நோட்"எழுதி 

நம் தமிழ்ப்பிரளயங்களை 

பரப்பித்தந்த  அந்த 

"கடியலூர் உருத்திரங்கண்ணன் "

உதிர்த்த பத்துப்பாட்டுப்பூவொன்று 

நம் ஒவ்வொரு தருணங்களையும் 

தமிழ் மகரந்தங்களின் மழையாக 

பொழிகின்றது.







_______________________________________________________________

சொற்கீரன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக