ஒலியே இங்கு
ஓலி ஓலி !!
உற்சாக வெள்ளம்
தூரிகை ஆகி
உள்ளம் என்னும்
தூர் அடி புகுந்து
தூய நட்பின்
வண்ணங்கள் ஆகின.
சிந்து என்று சிந்திய
மழைத்துளியெல்லாம் நம்
மனத்துளிக்குள்ளே
எண்ணம் ஒன்றாய்
இந்தியம் சுடர
நகைகள் பூக்கும்!
முகக்ங்கள் பூக்கும்!
வாருங்கள் இங்கே
நாமும் இங்கே
எல்லோரும் எல்லோரும்
கொண்டாடுவோம்.
தமிழுக்குள்
எல்லா மொழிகளும் உண்டு.
எல்லா மொழியும்
தமிழுக்கும் இனிக்கும்.
மொழி எனும் செங்கோல்
தூக்கிட நினைதால்
பொடிப்பொடியாகும்
புன்மைகள் மறையும்.
பிறப்பின் வந்த
வெறுப்பின் வண்ணம்
அழித்தால் அங்கே
இருள் கிழிந்து
ஒளியே சிரிக்கும்.
வாரீர் வாரீர் நம்
வண்ணங்கள் எல்லாம்
ஒர் எண்ணம் ஆக்கி
மனிதம் என்னும்
விசையினைப் பெருக்கி
கொண்டடுவோம் நாம்
கொண்டாடுவோம்.
எல்லொரும் இங்கே
கொண்டாடுவோம்.
______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக