ஒரு "உலக மகளிர் தினம்"
__________________________________________
சொற்கீரன்
பெண்ணே!
உன்னைத்தான் அழைக்கிறேன்.
நீ கிரீடம் சூட்டிக்கொண்டு
எங்கள் பாரதத்தில்
மாதாவாக இருந்து
இந்த குழந்தைகளைக்
கவனித்துக்கொண்டு தான்
இருக்கிறாய்.
உன் பெண்ணுரிமையைப்பற்றி
எப்போதாவது
நீ நினைத்துப்பார்த்தது உண்டா?
இவர்களது மனுதர்மம்
ஒருநாள்
முண்டைக்கண் கொண்டு
விழித்து விடலாம்.
நீயும் பாவப்பிண்டமான
ஒரு பெண்தானே.
இன்று இவர்கள் தீட்டுக்கழிக்க
கிளம்பி விடுவார்கள்.
நீ அந்த நான்குவர்ணச்சேலையில்
மூவர்ணம்
காட்டிக்கொண்டிருக்கும் வரை தான்
இந்த மத்தாப்பு வாணங்கள்!
உன் குழந்தைகள் எல்லோருக்கும்
பிறப்பு ஒன்று தான்
என்று என்றைக்காவது
ஒரு தேசீய கீதம் நீ பாடினால்
அவ்வளவு தான்....
அப்போது எங்கு பார்த்தாலும்
ரோடு ரோலர்களே
சட்டமாகி விடும்.
நீ இந்த மண் மட்டும் அல்ல.
மொத்த சமுதாயத்தின்
மனிதம் மலர்விக்கும்
சம நீதியே நீ தான்.
தமிழ் மண்ணில்
"தாயி" நீ பிறந்த நேரமே
எங்கள் கண்களின்
ஒளி பிறந்த நேரம்
என்று கொண்டாடுவார்கள்.
பெண்மையையே
உண்மை என்று போற்றும்
நாளாக
இன்று சுடரட்டும்.
காளியாய் வந்து
பலி கேட்கிற பெண்ணே!
ஆடும்
கோழியும்
போலவா
இவர்கள் உன் முன்னே
இப்போது இந்த
"ஜனநாயகத்தை"
நீட்டுகிறார்கள்?
பெண் எனும் காளியே
மக்கள் நாயகம் மண்ணில்
தழைக்க
பெண்ணே!
உன்னைத்தான் அழைக்கிறேன்.
நீ கிரீடம் சூட்டிக்கொண்டு
மாதாவாக இருந்து
இந்த குழந்தைகளைக்
கவனித்துக்கொண்டு தான்
இருக்கிறாய்.
உன் பெண்ணுரிமையைப்பற்றி
எப்போதாவது
நீ நினைத்துப்பார்த்தது உண்டா?
இவர்களது மனுதர்மம்
ஒருநாள்
முண்டைக்கண் கொண்டு
விழித்து விடலாம்.
நீயும் பாவப்பிண்டமான
ஒரு பெண்தானே.
இன்று இவர்கள் தீட்டுக்கழிக்க
கிளம்பி விடுவார்கள்.
நீ அந்த நான்குவர்ணச்சேலையில்
மூவர்ணம்
காட்டிக்கொண்டிருக்கும் வரை தான்
இந்த மத்தாப்பு வாணங்கள்!
உன் குழந்தைகள் எல்லோருக்கும்
பிறப்பு ஒன்று தான்
என்று என்றைக்காவது
எங்கள் பாரதத்தில்
ஒரு தேசீய கீதம் நீ பாடினால்
அவ்வளவு தான்.
அப்போது எங்கு பார்த்தாலும்
ரோடு ரோலர்களே
சட்டமாகி விடும்.
ஓ! பெண்ணே !
நீ இந்த மண் மட்டும் அல்ல.
மொத்த சமுதாயத்தின்
மனிதம் மலர்விக்கும்
சம நீதியே நீ தான்.
தமிழ் மண்ணில்
"தாயி" நீ பிறந்த நேரமே
எங்கள் கண்களின் ஒளி
பிறந்த நேரம்
என்று கொண்டாடுவார்கள்.
பெண்மையையே
உண்மை என்று போற்றும்
நாளாக
இன்று சுடரட்டும்.
காளியாய் வந்து
பலி கேட்கிற பெண்ணே!
ஆடும்
கோழியும்
போலவா
இவர்க்ள் உன் முன்னே
இப்போது இந்த
"ஜனநாயகத்தை"
நீட்டுகிறார்கள்?
பெண் எனும் காளியே
மக்கள் நாயகம் மண்ணில்
தழைக்க
புது யுகமாய் நீ
புறபட்டு வா!
_______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக