டி எஸ் எலியட்
என்ற ஒரு ஆங்கிலக்கவிஞர்.
அப்படித்தான்
அவர் எழுத்துக்களைப்
பிரித்துக் கூறு போட்டு
உப்புக்கண்டங்களாக
காயப்போட்டு வைத்து விட்டுப்
போய் விட்டார்.
"இப்படித்தான் இந்த உலகம் முடிகிறது.
இப்படித்தான் இந்த உலகம் முடிகிறது.
இப்படித்தான் இந்த உலகம் முடிகிறது"
என்று
ஒரு கண்னாடி விளிம்பு காட்டி விட்டுப்
போனார்.
அது எப்படித்தான் உடைகிறது
என்று பார்க்கலாமே
என்று
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என் "பயத்தை".
____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக