புதன், 12 மார்ச், 2025

அகழ் நானூறு 97

 அகழ் நானூறு 97

____________________________________________
சொற்கீரன்


குரூஉ குய்புகை இல் இல் எழுதரூஉ
சிற்றூர் குழூஉம் பைஞ்சுரம் தழீஇ
சோறு நாறு நவில்தொரு சொல்லின்
நெல்லும் புல்லும் பொலம்நேர் பூவும்
அம்தீ நெடுவான் நாப்பண் கூட்டும்
செந்தீத் தமிழின் மணிநிற‌ வேள்வி
தெரிந்தார் அயலர் ஆங்கு ஓதம் இரீஇ
ஒக்கல் கூடி மொழிதல் இரைந்தார்.
நந்தம் நற்றமிழ் விரவிய ஒலித்தொடை
மறையின் ஓதம் மரூஉத் தோன்ற‌
மறையத் திரித்ததே வேதம் என்ப.
ஆரிடை ஆர்த்த ஆர்கலித் தமிழே
ஆரல் வாய் மொழி ஆயிரம் ஆனதில்
ஒன்றை உருவி தனதே என்று
சூடிய பின்றை எம்மிடை யாங்ங‌ன்
ஆரியம் என்று அளக்க வந்தது?
விருந்தோம்பல் தமிழன் பண்பு.
வரு விருந்தும் செல் விருந்தும்
தமிழைத் தின்ன வந்ததே கொடு
வல் வினை அறிவீர் அறிவீர்!
தெண்ணீர் மாக்கடல் திரைகள்
ஆயிரம் ஆலவும் ஆளவும்
சென்றான் தமிழன் கொணர்ந்தான்
உலக மொழி அனைத்தும் இங்கே.
ஆர் திரை நுடங்க நனி நவில் தரூஉம்
தமிழ் மொழி நேர்ப்படும் சம மொழியே
சமக்கிருதம் ஆனது தெளிவீர்.
கரம் எனும் நம் சொல் ஆங்கே
மருவிய காலை கிருதம் ஆனதே
சமக்கிருதம் யாங்கும் ஆனது.
கரத்தில் மறைத்தலே கரத்தல் ஆம்.
கரத்தல் எனும் நம் சொலே
கரத்தின் மருவிய கிருதம் ஆனது.
அம்மட்டே ஈண்டு ஆரியம் எல்லாம்.
ஆரிங்கு நம்மிடை ஒளித்து வந்து
மொழிகள் மிழற்றினார் யாதும் அறிவம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாது மொழியினும் இமிழ்தரும்
ஒலியில் தமிழே தமிழே இவண்
ஒலிக்கும் என்னே உலகம் அறியும்.
___________________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக