சனி, 15 மார்ச், 2025

"பை"

 "பை" (22/7)

_____________________________
யவனன் மொழிந்த‌
"அகர முதலம்"
ஒரு நுண்ணிய கணிதம்
அன்று சொன்னது
நம் தமிழன் சொன்ன‌
வட்டமும் விட்ட்மும்
கணித்த பின்னமே!
பகா எண்ணின்
வால் நூல் தேடி
எத்தனை? எத்தனை?
அறிவின் வேட்டை!
மிச்சம் இல்லா
உச்சம் தேடி
உழுத கணக்கும்
எத்தனை எத்தனை?
எல்லையில்லா
ஒரு எல்லை உண்டு
என‌
குவாண்டம் என்னும்
நுண் அளபடை
இலக்கணம் சொன்னது.
இன்று அதன்
விழுதின் ஊஞ்சல்
ஆட்டம் கொண்டு
விந்தைகள் புரிவது
மனிதன் அறிவே!
ஃபூரியர் ட்ரான்ஸ்ஃபோம்
எனும்
நுண்மாண் நுழைபுலம்
நுழைந்தவன் மனிதன்.
வேகத்தின் வேகம்
கோடி..கோடியென‌
கூர் வேகம் கொண்டு
அந்த‌
பிக் பேங்க் வெடியின்
திரிமுனை சென்று
சூத்திரம் சொல்பவன்
"சூத்திரனா" என‌
பல் "நற நற"க்கும்
புதுமை தினமும்
இந்நாளே!
பை தனை ப்ப்ற்றுவோம்.
பை பை என்போம்
பழம்பெருச்சாளி
கூட்டத்தார்க்கே!
________________________________
செங்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக