சமுதாயத்தின் ஒரு "சைக்காலஜி"
_____________________________________
ஒரு மதவாதியிடமிருந்து
ஒரு மனிதனை பிரித்தெடுத்து
நம்மால் வாசிக்க முடியுமென்றால்
அதுவே ஒரு கூர்மைமிக்க
ஒரு பகுத்தறிவு.
அந்த மதவாதியும்
தன்னிடமிருந்தே
ஒரு மனிதனைப் பிரித்து
அச்சடித்து வைத்துக் கொண்டு
படிக்க ஆரம்பித்து விட்டால்
அவன் ரத்தத்தின் வாசனையை
அவனே முகர ஆரம்பித்து விட்டால்
அப்படி
படிக்கும் வரை
இந்த சமூதாயம்
பாடம் நடத்திக்கொண்டே தான்
இருக்கும்
கையில் பிரம்புடன்.
அடிக்க அல்ல
அடிவிழும் என்பதை
உணர்த்திக்கொண்டே இருக்க!
______________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக