உன் குரல் கேட்கின்றதா?
_____________________________________________
இந்தத் துப்பாக்கி
அல்லது வாளை ஏந்துவோம்.
எதிர்ப்படுவோர் உயிர்களை
பலிகொடுப்போம்.
ஓ!கடவுளே !
உனக்குத் தான் இந்த இரத்தம்
உயிர் சதை எலும்புகள் எல்லாம்.
வெறி எனும் உணர்ச்சிக்கு
கொம்பு முளைத்தது.
கோரைப்பற்கள் கூர்மையாய்
நீண்டு துருத்தின.
பலி கொடுக்கப்பட்டது.
திடல் யாவும் வெறுமை ஆகின.
இடம் யாவும் வெட்ட வெளியே!
யாருக்கு யார் பலி!
கடவுளே மனிதனுக்கு
பலியாகி விட்டது
அப்போது தான் தெரிந்தது.
போதும்!
இனி நானே கடவுள் என்றான்.
கையில் வாள் இருந்தவன்
கடவுள் ஆனான்.
துப்பாக்கிக்குண்டுகளே
தேவ வசன்ங்கள்.
வலியவன் உலகத்தை
எடுத்துக்கொண்டான்.
எளியவை எல்லாம்
முட்டி போட்டு
முணு முணுத்தன.
மூளை வலிமை கூட
முற்றிய அறிவு இன்றி
முடங்கிக்கொண்டது.
துப்பாக்கிகள் தன்னை
கம்பியூட்டர்கள் ஆக்கிக்க்கொண்டன.
ஆக்கி அளித்தவன்
அறிவின் நுனிக்கொம்பர் ஏறினான்.
அப்போதும்
துப்பாக்கியே அங்கு
மூளையை திரட்டி
சுருட்டிக்கொண்டது.
அணு என்றது.
அண்டம் என்றது.
குவாண்டம் என்னும் நுட்பம் கண்டது.
அறிவின் உள்ளே இன்னும்
துப்பாக்கியின் பரிணாமம்
புகை கக்கியது.
எங்கோ ஏதொ ஒரு
"கோள்'
அதனையும்
"வைரப்பிண்டம்" என்றது.
துப்பக்கியின் அறிவின் நாக்கு
நீண்டு தொங்கி "ஜொள்'விட்டது
மில்லியன் மில்லியன்
ஓளியாண்டு நீளக்கணக்கில்.
அழிவைக்காக்க
கடவுள் தேடியவன்
ஆளும் ஆசை கொண்டான்.
கடவுளும் அங்கே வெறும்
ஆவியாய் ஆகினான்.
எங்கே மனிதன்?
குரல் இன்னும் கேட்டது.
மனிதன் குரலே
மனிதனுள் கேட்கின்றது?
மனிதா! மனிதா!!
உன் குரல் கேட்கின்றதா?
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக