கவிஞர் நந்தலாலா அவர்களே
_______________________________________
அன்புள்ள நந்தலாலா அவர்களே
காக்கைச்சிறகினிலே நந்தலாலா..
என்று அந்த
பாட்டை பாடும்போதெல்லாம்..
அடுத்த வரியில் உங்கள் ஞாபகமே
எனக்கு வரும்.
ஆனால் பாடல் வரிகள்
தானாகவே மாறிவிடும்
..."சிவந்த நிறம்..
தோன்றியதே நந்த லாலா..."
என்று.
செங்காக்கைகள் ஆயினவே
உன் கவிதை கண்டு..
சமுதாய ஓர்"மை" மட்டுமே
உன் பேனாக்களின் மை!
எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள்
______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக