மதுரை எனும் தூங்காநகரம்
_____________________________________
சொற்கீரன்.
மதுரை அம்பதியே!
மதிமலி புரிசை
நான் மாடக்கூடல்
எனும்
தமிழ்ச்சுவடிகளின்
எழுத்துக்களின் இனிய
ஊர்வல்மே!
சங்கம் வளர்த்த தமிழ் ஒலி
அந்த
தென்னோலைக்காரத்தெரு
சுண்ணாம்புக்காரத்தெரு
சித்திரக்காரத்தெரு
செம்பியன் கிணற்றுத்தெரு
....
எத்தனை எத்தனை முகம் உனக்கு
தூங்கா நகரமே!
சித்திரை
ஆடி
மாசி
ஆவணி என்று
உன் தெருக்கள் தான்
எங்களுக்கு
அன்றாட 'பஞ்சாங்கம்'.
மாசி வீதிகளின்
தூசிகள் கூட இங்கே
பொன் தூசிகள் தான்.
ஏன்?
நகைக்கடைகள் அருகே
தினம் தினம்
பொன் விலை பகரும்.
கிழக்குச்சித்திரை வீதியிலே
மங்கையர்கள் முகம் மலரும்.
ஏன்?
அங்கே மல்லிகை நெடுஞ்சரங்கள்
பூ விலை பகரும்.
இமை மூடா நகரம்.
செவிக்கு அந்த ஓசைகள் கூட
சுவை தான்!
நடு நிசிகள் கூட
பயப்படுவதில்லை.
ஆம்
அந்த இன்னிசை விருந்து
"பரோட்டா"பக்குவமாய் வர
தட்டிக்கொட்டும் தாள் இசை.
"ட்ரம்ஸ்" சிவமணியின்
அதிர்வோசைகள் இனிதாய்
அங்கே கேட்கும் !. கேட்கும் !.
கடிகார முட்கள்
பன்னிரெண்டு தாண்டியும்
இரவு ரோஜாக்களை
இன்பமுடன் பூக்கும்.
(தொடரும்)
____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக