நாம் ஈசல்கள் அல்ல.
____________________________________________
பிரபஞ்சம் மகத்தானது
என்று
பூதம் காட்டி பூதம் காட்டி
கடவுளை
வேப்பிலை மந்திரம் அடித்தோம்.
அதன் வெறிக்கூச்சலை
மனிதம் பிளக்கும்
கோடரியாக்க
மதம் மாட்டிக்கொண்டோம்.
ஆற்றல் துகள் இரண்டும்
மனிதனின் அறிவுத்தோட்டத்தில்
சிறகடிக்கும்
இரு பட்டாம்பூச்சியாக
சிறகடித்த
சிலிர்ப்புகளின் கணித சமாண்பாடுகளில்
அது அழகாக
குவாண்டம் என்று நம்மைப்பார்த்து
கண்ணடித்தது.
அந்த கண்சிமிட்டலுக்கு
மொத்தப் பிரபஞ்சமுமே
சாமரம் வீசத் தொடங்கி விட்டது.
இவர்களின்
அசுரன் தேவன் மற்றும்
பாவம் புண்யம்...
நான்கு வர்ணம் எனும்...
கிச்சு முச்சா மந்திரங்கள்
குப்பைகளாய் போன பிறகு
இன்னும்
என்ன
அரிதாரம்..அவதாரம்
வேண்டிக்கிடக்கிறது?
கீதை எனும் படுகுழிகளில்
வீழ்ந்து கிடக்க
நாம் அடிமை ஈசல்கள் அல்ல.
மனிதா!
ஓட்டுப்பெட்டி உன்
சவப்பெட்டியாகு முன்
உன் சரித்திரத்தைக்
கூர்மை தீட்டு.
இவர்களின் தீட்டு தந்திரங்கள்
எல்லாம்
அழிந்தொழிய
கூர்மை தீட்டு.
__________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக