புத்தகம் என்றால் என்ன?
__________________________________
புத்தகம் என்றால் என்ன?
என்று
பொருள் விரிக்க
ஆரம்பித்தால்
கிழக்கின் "சிப்" பிளந்து
இருட்டு புதைக்கப்படுகிறது.
எத்தனை பக்கங்கள்
அறிவுக்கு?
அத்தனைக்கும்
மறு பக்கங்கள் யாவும்
உணர்வுக்கு.
அதை
இது எரிக்கவா?
இதை அது
அணைக்கவா?
சாம்பல் பூக்களில்
வரலாறு தேடப்படுகிறது.
கபாலம் கிடைக்கவில்லையாம்.
கை கால் எலும்புகள்
மட்டுமே மிச்சமாம்.
கர்மம் செய்ய போதும்
என்று
மந்திரங்கள் அவசரப்பட்டன.
மூளையின் மாதிரி சிலிகான் சிப்புகள்
கூட
அந்த அரிசியையும் வாழைக்காயையும்
மடியில் முடிந்து கொள்ளும்
கரன்சிகளின் தட்சிணையோடு.
இன்னும் என்ன
அறிவு கிறிவுன்னு
பேசிகிட்டு...?
சொர்க்க வாசலுக்கும்
ஏ ஐ
ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்துடுத்தாமே!
மேக்ஸ்முல்லரே சொல்லிட்டானே.
நம்ம மந்திரங்களத்தான்
அவா காப்பியடிச்சு
வச்சிண்டிருக்காளாம்.
____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக