சனி, 8 மார்ச், 2025

கடல்நுரைகள்


கடல்நுரைகள்

______________________________________

சொற்கீரன்.


______________________________________

ஈரோடு தமிழன்பன்

08.03.2025ல் எழுதிய கவிதை பற்றிய‌

கவிதை

________________________________________‍



விடியலை

தினமும் வெங்காயத்தைப்போல்

உரித்துக்கொண்டே இரு.

ஒன்றுமே இல்லையே

என்ற எரிச்சல்

வியப்பாய் மாறும்.

ஓவ்வொரு இதழ்களுக்குளும்

மீண்டும் நுழை

இதயமாய்.

அந்த துடிப்புகளுக்கு

ஒரு எண்ணிக்கை இருக்கிறது.

அந்த எண்ணிக்கையின்

மரண கணிதமே

ஒரு மாணிக்க வாசல்.

அந்த

சர்க்கரையை காகிதத்தில்

எழுதிப்பார்த்து 

நக்கி நக்கித்தான்

கற்பனையில் இனித்துக்கொள்ளமுடியும்.

இருப்பினும்

உனக்கு மண்டை வீங்கிக்கொண்டு தான்

போகிறது.

உன் இயற்பியல் கணிதத்தை

உன் விரல் சொடுக்குகளில்

குவாண்டம் என்று பிண்டம் பிடித்து

மறு பிறவி எனும்

"பாரிஸ் சேம்பெய்னை"

நுரைக்க நுரைக்க‌

குமிழிகளில் கரைந்து

குடித்துக்கொண்டே இருக்கிறாய்.

குருட்டாம் போக்கில்

அந்த விஞ்ஞான மேதை

டாக்டர் பென்ரோஸின்

சைகிளிக் யுனிவர்ஸில்

ஏதோ ஒரு பிரபஞ்சத்தில்

ஏதோ ஒரு கூடுவாஞ்சேரி

பிள்ளையார் கோவில் தெரு

எட்டாம் தெருவில்

பிறந்து

எல்லா இற‌க்கைகளிலும் 

சிறகடித்து

சிறகுதிர்ந்து அப்புறம்

அந்த  ப்ராக்சிமா "பி"யில்

பளிங்கு உருண்டையின்

முண்டைக்கண்களோடு

அயலியன்களின்

அடுக்குகளில்

அகநானூறு பாடத்தொடங்கி விட்டாய்.


_______________________________________________







 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக