அகழ்நூனூறு -95
-------------------------------------------------
சொற்கீரன்.
பவளம் குவவு ஆறு நிறைத்து ஆங்கே
கிளி நிரை ஆர்த்து உருகெழு மூச
கல் அதர் செல்வர் கண்ணிற் புலம்ப
ஆறலை கள்வரும் அடி பிறழ்வாராய்
இலஞ்சி ஏங்கும் தண்ணிழல் சீர்க்கும்
தறுகண் பரந்தை ஆனாது ஏகும்
பொருளறன் ஊக்கிய பொலம்நேர் தலைவ.
விழிநீர் சுனையில் தன் நிழல் ஓர்த்து
அளியவள் ஆண்டு அலர் மழை ஊசியின்
கூர் கூர் விழுப்புண் உறுதல் நன்றோ?
நேர் நேர் படுக்கும் வெண்சீர் வெண்பா
உறழ் தொடுத்து ஒலி பிலிற்றுமாறு
உறக்கம் சிதைய உலைதல் எவன்?
இவள் கனவின் முள்மரம் ஏறுதி.
அஃதே பெருக்கும் குருதியின் யாறு
உன் தடம் ஒற்றும் வலியில் நீயும்
சேர்வாய் இவட்கண் மின்னல் என்ன
இறைவளை பற்றிட எழுவாய் நீயே!
-------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக