வெள்ளி, 14 மார்ச், 2025

தோழர் கே முத்தையா அவர்களே

தோழர் கே முத்தையா அவர்களே

____________________________________
உங்களை நினைவு கூர்வது
மார்க்ஸின் அந்த‌
மலை முகடுகளின்
சிந்தனைக்கீற்றிடையே
மின்னல் புழுவென
கொஞ்சம்
நெகிழ்ந்திடல் அல்லவா அது!
நான் கசக்கி கசக்கிப்போட்டு
ஒதுங்கிய
காகிதங்களின்
கருப்பையில் இருந்து
ஒரு "செங்கீரனை"
பிரசவிக்கச்செய்தவன் அல்லவா நீ.
புதிய யுகத்தின் ஒளியை
மார்க்ஸின் அறிவெனும்
சிக்கி முக்கிக்கல்
பொறி தெறித்த போது
இந்த தேசத்தின்
சுரண்டல்களின்
வர்ணமெட்டுகளில்
ஒளிந்து கிடந்த "விலங்குகள்'
தெறிந்து விழுந்தன.
அந்த தாஸ் கேபிடலுக்கு
முகம் காட்டாத முகவுரைகள்
இன்னும் இந்த மண்ணுக்குள்
தான்
காத்திருக்கின்றன "கல் பாக்கங்களாய்".
அன்று நான்
நம் சுதந்திரத்து வெள்ளிவிழாவின்
ஜிகினா வெளிச்சங்களை
"தோரணங்கள் ஆடுகின்றன"
என்ற தலைப்பில்
செம்மலருக்கு தந்த போது
அதை அந்த இதழ்
தலையங்கமாகவே ஆக்கி
எனக்கு வெளிச்சம் பூசினீர்களே!
அன்று முதல் என்
பேனாவுக்குள்
இருட்டடித்ததே இல்லை.
வாழ்க! வாழ்க!
எழுத்தியலின் செம்மலே!
_____________________________________
செங்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக